Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Wednesday, January 11, 2012

விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள்


விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி

Tuesday, January 10, 2012

அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது


               பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளததாம். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணம் ஏதும் இல்லயாம்.

            பேருந்து கட்டணத்தை உயர்த்துவது என்பது தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாம். அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் பொருளாதார நெருக்கடியால் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது என தமிழக அரசு தனது பதிலில் கூறியுள்ளதாம்.
               அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது ஏனெனில் போக்குவரத்து துறையில் செய்த விலையேற்றத்தை டாஸ்மாக்கில் மதுக்களில் ஏற்றியிருக்கலாம் அல்லது  ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து பிடுங்கி இருக்கலாம் அதை விடுத்து பொது மக்களின் அன்றாட செலவுகளில் திணிப்பது சரிஅல்ல இது கண்டிக்க தக்கது.

...........................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

ரஞ்சித்தின் 'அட்டகத்தி'

                தமிழ் சினிமாவின் தலைநகரமாக சென்னை விளங்கினாலும், ஏராளமான திரைப்படங்களின் கதைகளம் சென்னை தவிர்த்த பகுதிகளாகத்தான் இருக்கும். இருபீனும் ஒரு பக்கம் இப்படி சென்னையை கண்டுகொள்ளாமல் இருந்தாலும்,சில இயக்குநர்கள் தயவால் அவ்வப்போது சென்னையும் சில திரைப்படங்களில் தலை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது மற்றொரு புதுமுக இயக்குநரும் அந்த சிலருடன்  இனைகிராராம் .சென்னையை  கதைகளமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'அட்டகத்தி'.
                 படத்தின் பாடல்களும், டிரைலரும் இது சார்ப்பான கத்தி என்பதை புரிய வைத்ததாம். வட சென்னையில் இருந்து கல்லூரிக்கு வரும் இளைஞனின் காதல் காவியம்தான் இந்தப் படம். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப.ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறாராம்.

              இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட பாடல்களும் சரி, மேடையில் இசைக்கலைஞர்கள் நேரடியாக பாடிய பாடல்களும் சரி அத்தனையும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் படி இருக்கிறதாம் . குறிப்பாக கபிலன் எழுதி, கானா பாலா பாடியிருக்கும் "ஆடி போன ஆவணி இவ ஆல மையக்கும் தாவனி..." என்ற  பாடல் சற்று துள்ளலான பாடலாம்.

               இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையை இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறதாம்.

          ஹீரோவாக தினேஷ் என்பவர் அறிமுகமாக, இவருக்கு ஜோடியாக நந்திதா, ஐஸ்வயா, ஷாலி ஆகிய மூன்று பெண்கள் நடிகிரார்களாம். படத்தில் இடம்பெறும் அத்தனைப் பேரும் அனியாயத்திற்கு சாதரண முகங்களாக இருக்கிறார்கள். இப்படி கதைக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் இப்படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்ல வேண்டுமாம்.
.............................விரைவில் சந்திப்போம் ........காங்கேயன்

Thursday, January 5, 2012

ஜீவாவின் நிறைவேறாத ஆசை

             முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தாலும் திருஷாவுடன் ஜோடி போடுவது ஜீவாவுக்கு நிறைவேறாத ஆசையாக இருந்ததாம். இவருடைய முந்தையப் படங்கள் சிவவற்றில் நடிக்க திரிஷாவை அனுகியபோது அவரிடம் இருந்து சரியான பதில் வராததால் ஏமாற்றம் அடைந்த ஜீவாவுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறதாம்.

கோ படத்தின் மூலம் வசூல் நாயகனாகவும் ஆன ஜீவாவுடன் திரிஷா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இவர்கள் இணையும் படத்தை அகமது இயக்கப் போகிறாராம். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த வாமணன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும், தற்போது இவர் சொன்ன கதையை கேட்ட ஜீவா அசந்துப்போய்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

தற்போது கெளதம் மேனன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜீவா, அடுத்ததாக இந்த படத்தில் இறங்கப்போகிறாராம்.

................................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

Wednesday, January 4, 2012

personal loan----மகான் கணக்கு----housing loan

 

Tuesday, January 3, 2012

இந்திய அணியின் கேப்டன்

                இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி சர்வதேச விளையாட்டு பத்திரிகை சங்கத்தின்'நேர்மையான வீரர்' விருதை தட்டிச் சென்றிருக்கிறார். கடந்த ஆண்டு டிரன்ட்பிரிட்ஜில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இயான் பெல் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானாராம். மூன்றாவது நாள் ஆட்டத்தில், தேநீர் இடைவேளைக்கு முன், தான் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றதாக நினைத்து, "பெவிலியன்' நோக்கி நடந்தாராம். உண்மையில் பந்து, எல்லைக் கோட்டை கடக்கவில்லையாம். இதையடுத்து இவரை தோனி 'ரன் அவுட்' செய்தார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி சரி என்பதால், அம்பயரும் 'அவுட்' கொடுத்தாராம். ஆனால், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட தோனி, 'அப்பீலை' திரும்ப பெற்று, பெல்லை மீண்டும் 'பேட்' செய்ய அனுமதித்தாராம். அதனால் தோனியின் இந்த செயலை பாராட்டி ஏ.ஐ.பி.எஸ்., நேர்மையான வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனை பெறும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இது குறித்து ஏ.ஐ.பி.எஸ்., பொதுச் செயலர் ரோசலின் மோரிஸ் கூறுகையில், 'நேர்மையான வீரர் விருதை முதல் முறையாக கிரிக்கெட் வீரருக்கு வழங்குகிறோம். இது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும் என்றும் விருது வழங்கும் விழா வரும் ஜன.13ம் தேதி ஆஸ்திரியாவில் நடக்க உள்ளது என அவர் தெரிவித்தார் மேலும்

தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால், இதில் தோனி கலந்து கொள்ள முடியாது. எனவே, இவருக்கு நினைவுப் பரிசை மட்டும் வழங்கியுள்ளோம். விருதுக்கான கோப்பை வரும் ஏப். 4ம் தேதி ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழாவில் வழங்கப்படும்' என்றார்.

.......................நல்ல ஆட்டகாரனுங்க டோனி
.....................................விரைவில்  சந்திப்போம்   ......காங்கேயன்

Monday, January 2, 2012

பறிபோகும் நமது உரிமைகள்..........



பறிபோகும் தமிழக உரிமைகள்?

தமிழகம் எதிர்நோக்கும் வாழ்வா, சாவாபிரச்சினை முல்லைப் பெரியாறு மாத்திரம் அல்ல

கர்நாடகத்துடன் காவிரி நதிநீர் பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்றுப் பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு பிரச்சினை இவற்றுடன் அண்டை நாடான இலங்கையுடன் கச்சத்தீவுப் பிரச்சினைஎனத் தமிழகத்தின் எல்லைகளுக்கு அப்பால் நிலை கொண்டுள்ள பிரச்சினைகளின் விளைவாக தமிழக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறது. தமிழகம் தனது நியாயமான உரிமைகளைப் பறி கொடுத்து வருகிறதோ?

காவிரி நீர் : வருமா? வராதா?

கர்நாடகத்தில் குடகில் உற்பத்தியாகும் காவிரி, சுமார் 800கிலோ மீட்டர் நீளமுள்ளது. கர்நாடக  மாநிலத்தில் 350கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் 450கி.மீ. தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது. கர்நாடகத்தைவிட அதிக தூரம் தமிழகப் பகுதியில் பாய்கிற  காவிரியாற்று நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கு என்பது அந்த மாநிலமாகப் பார்த்து நமக்கு அளிக்கிற பரிசோ, பிச்சையோ அல்ல.  அது தமிழகத்தின் உரிமை. ஒரு நதியின் மீதான உரிமை அது உருவாகும் மாநிலத்திற்கு மட்டுமல்ல, அதன் மூலம் பாரம்பரியமாகப் பாசனம் பெறும் பகுதிகளுக்கும் உண்டு என்பது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு Riparian water rights  என்று பெயர்.1924ம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் இருந்த சென்னை மாநிலத்திற்கும், மைசூர் அரசரின் ஆட்சியின்கீழ் இருந்த சமஸ்தானத்திற்குமிடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காவிரி நீரில் தமிழகத்திற்குரிய பங்கு 427டி.எம்.சி. தண்ணீர். 50ஆண்டுகளுக்குப் பிறகு, உபரிநீரின் அளவைக் கணக்கிட்டு, அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பிரிவு. அது ஒரு பிரிவு மட்டும்தான். ஆனால், அந்த ஒப்பந்தம் 50ஆண்டுகளுக்கு மட்டும்தான், அது செயலிழந்துவிட்டது என்று திரிக்கத் தொடங்கியது கர்நாடகம். இதனால், 1971ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது."1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அதில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு 205டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதில் தமிழகத்தில் விவசாயவேலைகளுக்கு ஏதுவாக, ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.ஆனால், இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்க மறுத்து விட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டில் மழை கிடையாது. அப்போதுதான் குறுவை சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடி மூலமாகத்தான், விவசாயிகளின் வாழ்க்கைக்குத் தேவையான பணம் கிடைக்கும். காவிரித் தண்ணீர் முறையாகக் கிடைக்காததனால் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது.2005ம் ஆண்டு நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இடைக்காலத் தீர்ப்பில் 205டி.எம்.சி. என்று கூறிவிட்டு, இறுதித் தீர்ப்பில் அதைவிடக் குறைவாக 178டி.எம்.சி. என்று கூறியுள்ளது நடுவர் மன்றம். அதையும் கூட ஏற்க மறுத்துவிட்டது கர்நாடகம்" என்கிறார், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன்.நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகிய இரண்டையுமே ஏற்க மறுத்த கர்நாடகம், ‘தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது’ என்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகமும், தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. வழக்கு நிலுவையில் உள்ளது.அப்படியானால், இப்போதும் சில நேரம் காவிரி நீர் தமிழகத்திற்கு வருகிறதே அது எப்படி? தமிழகத்தில் மழை இல்லாத ஜூன், ஜூலை மாதங்களில் தண்ணீர் வருவதில்லை. அக்டோபர் மாதம் கிருஷ்ணராஜசாகர் நிரம்பியதும் அணை திறக்கப்படும். அதாவது, தண்ணீர் திறக்கப்படாவிட்டால் அணை உடைந்துவிடும் என்ற அச்சத்தில் வெளியேற்றப்படும் நீர்தான் தமிழகத்திற்கு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், கர்நாடகத்தின் வடிகாலாகத்தான் தமிழ்நாட்டை நடத்துகிறது கர்நாடகம்.
ஒப்பந்தங்களை ஒரு பொருட்டாக மதிக்காத கர்நாடகம், காவிரியின் துணை நதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி, காவிரி நீர்முழுவதையும் தேக்கி வைக்கிறது. 1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில், கர்நாடகத்தின் பாசனப்பரப்பு 11.2லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 25லட்சம் ஏக்கருக்கும் மேல் அதிகரித்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு முன்பிருந்ததைவிட வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. முப்போக சாகுபடி செய்து வந்த நிலங்கள், தற்போது ஒரு போக சாகுபடி நிலங்களாகச் சுருங்கி விட்டன. தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிற அரசியல் கட்சிகள்காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கைப் பெறுவதற்கு, உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதாவது, காவிரியில் நமக்கு உரிய பங்கு கிடைக்காது என மனதளவில் முடிவுக்கு வந்து, மாற்று வழிகளை யோசிக்கத் துவங்கி விட்டன.

பாலாறா? பாழாறா?

வடிநிலப்பரப்பிலும், தண்ணீர் அளவிலும் காவிரிக்கு அடுத்தபடியாக இருப்பது பாலாறு. கர்நாடகாவில் கோலார் அருகே நந்தி  மலைத்தொடரில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93கி.மீ.தூரமும், ஆந்திராவில் 33கி.மீ. தூரமும் கடந்து தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்தில் 222கி.மீ.ஓடி, சென்னைக்கு 100கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. கர்நாடகத்தில் இது கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் ஓடி (அதனால் இதற்கு குப்தகாமினி என்று கர்நாடகத்தில் பெயர்), பெத்தமங்களா என்ற இடத்தில் பூமிக்கு வெளியே வருகிறது. கண்ணுக்குத் தெரியாமல் ஓடுவதாலோ என்னவோ, கர்நாடகம் இதில் பிரச்சினை செய்வதில்லை. ஆனால், ஆந்திரம் தகராறு செய்கிறது.தமிழகத்தில் பாலாற்றுப் படுகையின் பரப்பளவு 11,000கி.மீ. இப்படுகையில் வாழும் மக்கள் குடிநீருக்காவும், விவசாயத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாக பாலாற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலாறு மூலமாக, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் 2லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி டெல்டா பகுதிக்கு அடுத்த படியாக தமிழகத்திற்கு அதிக நெல் விளைச்சலைத் தருவது பாலாற்று வடிநிலப்பகுதி. ‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்லும் அளவுக்கு இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது. பாலாற்றில் தண்ணீருக்குப் பதிலாக கானல் நீரை மட்டுமே இன்று காண முடிகிறது. பாலாற்றின் மூலம் தண்ணீர் பெறுகிற 317ஏரிகள் இன்று வறட்சியை நோக்கிச் செல்கின்றன. பாலாற்றில் இருந்து செல்லும் 606ஆற்றுக்கால்வாய்களின் நிலையும் அதோகதிதான்.
1802ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, சென்னை மாகாணத்தின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நதிகளில் புதிய அணைகளோ, நீர்த்தேக்கங்களோ, நீர் அமைப்புகளோ ஏற்படுத்தக் கூடாது. பாலாறு உட்பட 15முக்கிய நதிகள் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்து இந்த உடன்படிக்கைக்கு மாறாக கர்நாடகம் செயல்பட்டு வருகிறது. பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு 77டி.எம்.சி. ஆனால், பாலாற்றில் இப்போது கனமழை காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. கர்நாடகத்தில் பல அணைகளைக் கட்டி, ஏராளமான தண்ணீரை அம்மாநிலம் எடுத்துக் கொள்கிறது. 45கி.மீ. தூரம் மட்டுமே பாயும் ஆந்திரப் பகுதியிலும் ஏராளமான தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. போதாக்குறைக்கு, தமிழகத்தின் எல்லைப்பகுதியான குப்பம் அருகே  250கோடி ரூபாய் செலவில் 160அடி உயரத்தில் தடுப்பணை ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சித்துவருகிறது ஆந்திர அரசு. இதன் மூலமாக ஆந்திரப் பகுதியில் 120கிராமங்கள் பயன் பெறும் என்றும், அங்கு புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு, சித்தூர்-திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளது ஆந்திர அரசு. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆந்திர அரசின் அணை கட்டும் முயற்சி தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அங்கு அணை கட்டப்படுமானால், தமிழ்நாட்டின் பாலாறு பாசனப் பகுதிகள்  நிரந்தரமாக பாலைவனமாக மாறிவிடும்.

எல்லை தரும் தொல்லை

தமிழகத்தின் தண்ணீர் வளம் குறைவானது. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டில் பாய்கிற ஒரே நதி தாமிரபரணி. மற்ற எல்லா நதிகளுமே அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்திற்கு வருபவை. அதனால்தான், தண்ணீர் உரிமைகளை மறுக்கிற அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.
"குமரி மாவட்டத்தில் நெய்யாறு பிரச்சினை, நெல்லை மாவட்டத்தில் அடவிநயினாறு பிரச்சினை, ஆழியாறு புன்னப்புரா பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, முல்லைப் பெரியாறு, ஒகேனக்கல் என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம், தமிழகத்துக்குச் சொந்தமான பகுதிகளை நாம் இழந்ததுதான். மாநில எல்லைகளைப் பிரிக்கும்போது, தமிழகத்துக்குச் சொந்தமான பல பகுதிகளை இழந்துவிட்டோம். தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்திற்குச் சொந்தமானவை. அங்கு 2கிராமங்களில் மட்டுமே மலையாளிகள் உள்ளனர். கர்நாடகத்தின் மாண்டியா, கொல்லேகால் பகுதிகளில் சில கிராமங்கள் தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவை. தமிழர்கள் அதிகம் வசிக்கிற கோலார் தங்கவயல் கர்நாடகத்திற்குப் போய்விட்டது. தமிழகத்திற்குச் சொந்தமான சித்தூர், நெல்லூர், திருப்பதி ஆகிய பகுதிகள் ஆந்திராவிற்குப் போய்விட்டன. தமிழகத்திற்குச் சொந்தமான நெடுமாங்காடு, நெய்யாறு பகுதிகள் கேரளாவுக்குப் போய்விட்டன. இப்படி தமிழகத்துக்குச் சொந்தமான பகுதிகளை இழந்ததுதான் இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம்" என்கிறார், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.

மீட்கப்படுமா கச்சத்தீவு?

ஆறாத ரணமாய் நீடித்து வருகிறது தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதல்கள். இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, கச்சத்தீவுப் பிரச்சினை. கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை. அப்பகுதிக்குச் சென்று  மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் கச்சத்தீவைப் பயன்படுத்துவது நீண்டகால வழக்கம். ஆனால், இன்றைக்கு கச்சத்தீவுப் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கொலைவெறியோடு தாக்குகின்றனர். துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகின்றனர். படகுகளை சேதப்படுத்துகின்றனர். வலைகளையும், பிற கருவிகளையும் பறித்துச் செல்கின்றனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுஇலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததுதான் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஒப்பந்தத்திற்கு முன்பு கச்சத்தீவுப் பகுதி எப்படி இருந்தது?"கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது. தமிழக மீனவர்களும், இலங்கையைச் சேர்ந்த தமிழ் மீனவர்களும் கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது நீண்டகால வழக்கம். கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அச்சமயத்தில், தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் கச்சத்தீவு செல்வார்கள். அதேபோல் இலங்கையில் இருந்தும் கச்சத்தீவுக்கு வருவார்கள். பாஸ்போர்ட், விசா தேவையில்லை. அம்மை குத்தியிருந்தால் போதும். இந்தியாவிலிருந்து இலங்கையில் மலையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களில் 5லட்சம் பேர், திடீரென இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அவர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களைப் பிரிந்தனர். இரு நாட்டிலும் உள்ள மலையகத் தமிழர்கள் தங்கள் உறவுகளைச் சந்திக்கும் இடமாகவும்கச்சத்தீவு இருந்து வந்தது" என்கிறார், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.சனார்த்தனம்.1974ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே உருவான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமாக்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானாலும்கூட, கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிப்பது, கச்சத்தீவில் வலைகளை உலர்த்துவது, ஓய்வெடுப்பது உள்ளிட்ட உரிமைகள் தமிழக மீனவர்களுக்கு உண்டு என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதாக, 1976ம் ஆண்டு மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடாவில் இரு நாட்டு எல்லைகளை வரையறுப்பதற்காக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அது வேறு பகுதிகளில் எல்லையை வரையறுப்பதற்கான ஒப்பந்தம். ஆகையால், தமிழக மீனவர்களின் உரிமைகள் குறித்து அதில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், தற்போது இரண்டாவது ஒப்பந்தத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறது இலங்கை. தற்போது கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்கிறது. இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறி வருகிறது.இதுவரையில், இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உடலில் துப்பாக்கிக் குண்டுகளைச் சுமந்து திரிகின்றனர். உடல் ஊனமுடைந்த 300க்கும் மேற்பட்டோர், தொழிலுக்குச் செல்ல முடியாமல் நடைபிணமாக உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இந்த அவலங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்திய அரசோ கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. கச்சத்தீவு மீட்கப்படுமா? தமிழக மீனவர்களின் துயரங்கள் துடைக்கப்படுமா?

ஒகேனக்கலிலும் சிக்கல்

நல்ல குடிநீரைப் பார்த்தறியாத தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், புளோரைடு கலந்த நீரைப் பயன்படுத்துவதால் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி மக்களின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதையும் செயல்படுத்தக்கூடாது என்று வம்பு செய்கிறது கர்நாடகம். காரணம், இத்திட்டத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுமாம். தமிழக எல்லைக்குள் வருகிற காவிரி நீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்வது தமிழ்நாட்டின் உரிமை. ஆனால், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம் என்று கூறிக்கொண்டு ஒகேனக்கலுக்கு படகில் வந்து அத்துமீறுகிறார்கள்.30லட்சம் பேருக்கு நல்ல குடிநீர் வழங்கப்போகிற இத்திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கர்நாடகத்தின் எதிர்ப்புக்குரல் தணிந்த நிலையில் உள்ளது. ஆனாலும் இது டைம்பாம் மாதிரி. எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

மறுக்கலாமா மொழியுரிமையை?

தமிழர்களின் தாய் மொழிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்பது நெடுநாளைய குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டைத் துடைத்தெறிவதற்கான எந்தவொரு அசைவும் இதுவரை இல்லை."ஒரு மனிதனுடைய விடுதலையின் முதல் அடையாளம், அவனுடைய மொழியைப் பயன்படுத்தச் செய்வதுதான். ஆனால், இந்தியாவில் இன்று வரையில் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றங்களிலும் நீதிமொழியாகத் தமிழ் இல்லை. நமக்கான சட்டங்கள் அனைத்தும் அயல் மொழியிலேயே இடம் பெறுகின்றன. நமக்கு வழங்கப்படும் தீர்ப்புகளை மொழிபெயர்த்துத்தான் படிக்க வேண்டியுள்ளது. வேறு மாநிலங்களுடன் தமிழில் தொடர்பு கொள்கிற உரிமை நமக்கு இல்லை. ஆங்கிலத்தில் அல்லது இந்தியில்தான் தொடர்புகொள்ள முடிகிறது. முதன்மை மொழியாக ஆங்கிலமும், இந்தியும் தான் இருக்கிறது. துணை மொழியாக மட்டுமே தமிழ் உள்ளது. தமிழ்நாட்டில் இயற்றப்பட்டுள்ள ஆட்சிமொழிக்கான சட்டத்தில், ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தமிழைத் துணைமொழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. ‘also tamil’ என்பதுதான் தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் நிலையாக உள்ளது. வழிபாட்டுத் தலங்களில்கூட தமிழர்கள், தமிழில் வழிபடுகிற உரிமை மறுக்கப்படுகிறது. அங்கு வடமொழிக்கு அடுத்த இடத்தில்தான் தமிழ் உள்ளது" என்கிறார், தமிழ்தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு.

தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வதாரங்களுக்கு உயிர் கொடுத்துவரும் இந்த உரிமைகள் மீட்கப்படுமா?

.................................விரைவில் சந்திப்போம் .காங்கேயன்

பெட்ரோல் விலையை உயர்த்த

        ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்த திட்டமிட்டிருகிறதாம்.

லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்த திட்ட மிட்டிருந்தனவாம். இந்த விலை உயர்வு நேற்றோ அல்லது இன்றோ அமல்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு புதன் கிழமை கூடுகிறது. அப்போது பெட்ரோல் விலை உயர்வு குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

                     .............பெட்ரோல் விலை உயர்த்த முடிவெடுக்க பட்டுவிட்டுது அப்புறம் என்ன பூசலோ போங்க   .........விரைவில் சந்திப்போம் காங்கேயன்

Wednesday, December 28, 2011

இந்தியாவில் மிக உயரிய விருது

     
                       இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது விளையாட்டு வீரர்களுக்கும் கிடைக்கும் வகையில் அதன் விதியில் மத்திய அரசு திருத்தம் செய்து உள்ளதாம். இதனால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.

                           சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உலக செஸ் சாம்பியன் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, 'விளையாட்டு வீரர்களும் பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெறும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிருக்கிறார். இந்த விருது எனக்கு கிடைத்தால் அது மிகப்பெரிய பாக்கியமாக கருதுவேன் என்று அவர் கூறினாராம்.

இந்த விருதுக்கு பொருத்தமான விளையாட்டு வீரர்கள் வேறு யாரும் உண்டா? என்று கேட்கப்பட்ட போது, அவர் யார் பெயரையும் குறிப்பிட மறுத்து விட்டாராம். மேலும் ஆனந்த் கூறுகையில், 'அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் வீரர் போரிஸ் ஜெல்பான்டுடன் மோத உள்ளேன்.

இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். இருப்பினும் நிபுணர்கள், இதில் நான் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு கவலை இல்லை. இந்த போட்டிக்கு தயாராகுவதற்கு 4 மாத கால அவகாசம் உள்ளது. போட்டிக்கு தயாராகும் பணியை அடுத்த மாதம் தொடங்குவேன்' என்றாராம்.

ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில்

       ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் அன்னா ஹசாரே போன்ற ஒரு மாபெரும் தலைவர் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், ஜன் லோக்பால் நாடாளுமன்றத்தில் சட்டமாக்க எடுத்துக் கொண்டுள்ள இந்த பணியினை நான் மனபூர்வமாக ஆதரிக்கிறேன். இந்த ரத்தமில்லாத ஒரு புரட்சியில் பங்கு கொண்ட எல்லா இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன். அமைதியான இம்மாதிரியான போராட்டம், சத்தியாக்கிரகத்தின் பிறப்பிடமான, இந்தியாவில் மட்டும் தான் நடக்க முடியும். இந்தியன் என சொல்லி கொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
-ரஜினிகாந்த்
................................................தலைவா உங்களோடு நாங்களும் .......காங்கேயன்

இந்திய ராணுவம்

                                                

                                                             இந்திய ராணுவத்தில்
                  தமிழகத்தை சேர்ந்தவர்கள், 6 சதவீதம் பேர் உள்ளனர் பணிபுரிவோர்
எண்ணிக்கை, தரம், திறன் ஆகியவற்றில் உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கிறததாம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்பதில் மிகப்பெரிய பங்காற்றுகிறதாம். இந்திய ராணுவத்தில் தமிழகத்தை சேர்ந்தோர், 6 சதவீதம் பேர் பணிபுரிகின்றனராம். சென்னை மண்டலத்திலிருந்து ஆண்டுக்கு, 6,000 முதல், 7,000 பேர் வரை ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனராம். . ராணுவத்தில்  சேர  தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள்    சிறப்பாக செய்துகொடுகிரதாம் .ஆள்சேர்ப்பு வெளிப்படையாக, நேர்மையாக, தகுதியின் அடிப்படையில் நடக்கிறதாம். யாருக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லையாம்.
புரோக்கர்களிடம் பணம் கொடுத்து வேலை பெற முடியாதாம். அப்படி யாராவது வேலை பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் பறித்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தவும் என ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறதாம் . சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி, மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு என பல கட்டத் தேர்வு முறை கடைபிடிக்கப்படுகிறது. போலி சான்றிதழ் அல்லது வேறு தவறான வழிகளைப் பின்பற்றி வேலை பெற நினைப்போர் பிடிபட்டால், அவர் இனி எந்த அரசு வேலைக்கும் செல்லமுடியாத படி நடவடிக்கை எடுத்து, சிறைக்கு அனுப்பப்படுவார்கலாம்  .ராணுவத்தில் நல்ல சம்பளம், தங்குமிடம், உணவு உள்பட பல்வேறு சலுகைகள் கிடைக்குமாம். அவரது குடும்பத்தினருக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்படுமாம்...............
.......................................  இன்னும் நமது நாட்டுக்காக போராட ஆயிரம் ஆயிரம் சுபாஷ் சந்தர போஸ்கள் காத்துகொண்டிருக்கிரார்க்ள் என்னையும் சேர்த்து விரைவில் சந்திப்போம்................... காங்கேயன்

Tuesday, December 27, 2011

கொலவெறி தான் காரணம் - தனுஷ்

'கொலவெறி' பாடல் தனுஷை ஊர் ஊராக சுற்ற வைக்கிறது. கொல்கத்தா, டெல்லி என பறந்து கொண்டிருக்கிறார்.

கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தினார்.

அங்கு பேசும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். 1. அப்பாடலில் உள்ள ஆங்கில வரிகள். 2. அப்பாடலில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை. 3. அதன் வரிகள் எங்கேயிருக்கும் இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.! " என்றார்.

டில்லியில் பிரதமர் வீட்டில் நடக்கும் விருந்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் தனுஷ்.

ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் என பிரபலங்கள் தனுஷை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைக்க வைத்திருக்கிறது 'கொலவெறி'.

இந்திய அளவில் தேசிய விருது, உலக அளவில் 'கொலவெறி' பாடல் என 2011 தனுஷின் ஆண்டாக இருக்கிறது


தஞ்சை சங்கர்