Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 11, 2012

விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள்


விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி

Tuesday, January 10, 2012

ரஞ்சித்தின் 'அட்டகத்தி'

                தமிழ் சினிமாவின் தலைநகரமாக சென்னை விளங்கினாலும், ஏராளமான திரைப்படங்களின் கதைகளம் சென்னை தவிர்த்த பகுதிகளாகத்தான் இருக்கும். இருபீனும் ஒரு பக்கம் இப்படி சென்னையை கண்டுகொள்ளாமல் இருந்தாலும்,சில இயக்குநர்கள் தயவால் அவ்வப்போது சென்னையும் சில திரைப்படங்களில் தலை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது மற்றொரு புதுமுக இயக்குநரும் அந்த சிலருடன்  இனைகிராராம் .சென்னையை  கதைகளமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'அட்டகத்தி'.
                 படத்தின் பாடல்களும், டிரைலரும் இது சார்ப்பான கத்தி என்பதை புரிய வைத்ததாம். வட சென்னையில் இருந்து கல்லூரிக்கு வரும் இளைஞனின் காதல் காவியம்தான் இந்தப் படம். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப.ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறாராம்.

              இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட பாடல்களும் சரி, மேடையில் இசைக்கலைஞர்கள் நேரடியாக பாடிய பாடல்களும் சரி அத்தனையும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் படி இருக்கிறதாம் . குறிப்பாக கபிலன் எழுதி, கானா பாலா பாடியிருக்கும் "ஆடி போன ஆவணி இவ ஆல மையக்கும் தாவனி..." என்ற  பாடல் சற்று துள்ளலான பாடலாம்.

               இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையை இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறதாம்.

          ஹீரோவாக தினேஷ் என்பவர் அறிமுகமாக, இவருக்கு ஜோடியாக நந்திதா, ஐஸ்வயா, ஷாலி ஆகிய மூன்று பெண்கள் நடிகிரார்களாம். படத்தில் இடம்பெறும் அத்தனைப் பேரும் அனியாயத்திற்கு சாதரண முகங்களாக இருக்கிறார்கள். இப்படி கதைக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் இப்படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்ல வேண்டுமாம்.
.............................விரைவில் சந்திப்போம் ........காங்கேயன்

Thursday, January 5, 2012

ஜீவாவின் நிறைவேறாத ஆசை

             முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தாலும் திருஷாவுடன் ஜோடி போடுவது ஜீவாவுக்கு நிறைவேறாத ஆசையாக இருந்ததாம். இவருடைய முந்தையப் படங்கள் சிவவற்றில் நடிக்க திரிஷாவை அனுகியபோது அவரிடம் இருந்து சரியான பதில் வராததால் ஏமாற்றம் அடைந்த ஜீவாவுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறதாம்.

கோ படத்தின் மூலம் வசூல் நாயகனாகவும் ஆன ஜீவாவுடன் திரிஷா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இவர்கள் இணையும் படத்தை அகமது இயக்கப் போகிறாராம். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த வாமணன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும், தற்போது இவர் சொன்ன கதையை கேட்ட ஜீவா அசந்துப்போய்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

தற்போது கெளதம் மேனன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜீவா, அடுத்ததாக இந்த படத்தில் இறங்கப்போகிறாராம்.

................................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

Wednesday, January 4, 2012

personal loan----மகான் கணக்கு----housing loan

 

Wednesday, December 28, 2011

அழகாக இருக்கிறார் ஆனால்

       அழகாக இருக்கிறார் ஆனால் கன்னடப் படம் ஒன்றிற்காக முழு நிர்வாணமாக நடித்திருக்கிறாராம் இவர்,  நடிகை பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல தமிழ்   படங்களில் நடித்தவர் நடிகை பூஜா காந்தி. தற்‌போது கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இப்போது ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்கும் தண்டுபால்யா எனும் படத்தில் நடித்து வருகிறாராம் . இப்படம் க்ரைம் நிறைந்த த்ரில்லர் கதையாம் . இந்தபடத்தில் தான் பூஜா உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கிறாராம்  (நாட்டுக்கு ரொம்ப அவசியம் ). ஆரம்பத்தில் நடிக்க யோசித்த பூஜா, பின்னர் படத்திற்கு இந்த காட்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை டைரக்டர் விளக்கி கூறிய பின்னர் நடித்து கொடுத்துள்ளாராம் . சமீபத்தில் தான் இந்த காட்சியை படமாக்கி இருகிறாராம்  டைரக்டர்.
                    இதுகுறித்து படத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாஸ் ராஜூ கூறுகையில், இந்த படத்தின் கதை 11பேர் கொண்ட ரவுடி கும்பலின் உண்மை கதை. இந்த 11பேரில் ‌லெட்சுமி என்ற பெண்ணும் இருக்கிறார். அவளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, நிர்வாணமாக்கி சித்தரவதை செய்துள்ளனர். இந்த காட்சியை படமாக்க எண்ணினேன்(?). இதற்காக தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன்.பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சி மற்றும் புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன். ஆரம்பத்தில் தயங்கிய பூஜா பின்னர் சில வாரங்களுக்கு பிறகு நிர்வாணமாக நடிக்க சம்மதித்தார். சமீபத்தில் சில ஆட்களை மட்டும் வைத்து ரகசியமாக இந்த காட்சியை படமாக்கினோம். பூஜாவும் எந்தவித கூச்சமோ, பயமோ இல்லாமல் நடித்தார் என்றார்.
    அந்தகாலதிலும்  சித்ரவதை காட்சிகள் படமாக்கப்பட்டன அனால் இந்த   அளவு இருக்காது என நினைக்கிறன். கதைகுதேவை  கதைகுதேவை  என்று  இந்த அளவு ஆபாசமான  காட்சிகள் அதிக படங்களில் இணைப்பது  தேவையில்லை என நினைக்கிறன்
..............................................................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

Tuesday, December 27, 2011

கொலவெறி தான் காரணம் - தனுஷ்

'கொலவெறி' பாடல் தனுஷை ஊர் ஊராக சுற்ற வைக்கிறது. கொல்கத்தா, டெல்லி என பறந்து கொண்டிருக்கிறார்.

கொல்கத்தாவில் நோக்கியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தினார்.

அங்கு பேசும்போது, " எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் நான் பாடத் தயாராக இருக்கிறேன். கொலவெறி பாடல் இவ்வளவு பிரபலமானதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். 1. அப்பாடலில் உள்ள ஆங்கில வரிகள். 2. அப்பாடலில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை. 3. அதன் வரிகள் எங்கேயிருக்கும் இளைஞர்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.! " என்றார்.

டில்லியில் பிரதமர் வீட்டில் நடக்கும் விருந்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் தனுஷ்.

ரத்தன் டாடா, அமிதாப் பச்சன் என பிரபலங்கள் தனுஷை தங்கள் வீட்டில் விருந்துக்கு அழைக்க வைத்திருக்கிறது 'கொலவெறி'.

இந்திய அளவில் தேசிய விருது, உலக அளவில் 'கொலவெறி' பாடல் என 2011 தனுஷின் ஆண்டாக இருக்கிறது


தஞ்சை சங்கர்