Tuesday, January 10, 2012

அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது


               பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளததாம். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் எண்ணம் ஏதும் இல்லயாம்.

            பேருந்து கட்டணத்தை உயர்த்துவது என்பது தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டதாம். அரசின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் பொருளாதார நெருக்கடியால் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக உள்ளது என தமிழக அரசு தனது பதிலில் கூறியுள்ளதாம்.
               அரசின் இந்த போக்கு கண்டிக்க தக்கது ஏனெனில் போக்குவரத்து துறையில் செய்த விலையேற்றத்தை டாஸ்மாக்கில் மதுக்களில் ஏற்றியிருக்கலாம் அல்லது  ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து பிடுங்கி இருக்கலாம் அதை விடுத்து பொது மக்களின் அன்றாட செலவுகளில் திணிப்பது சரிஅல்ல இது கண்டிக்க தக்கது.

...........................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

ரஞ்சித்தின் 'அட்டகத்தி'

                தமிழ் சினிமாவின் தலைநகரமாக சென்னை விளங்கினாலும், ஏராளமான திரைப்படங்களின் கதைகளம் சென்னை தவிர்த்த பகுதிகளாகத்தான் இருக்கும். இருபீனும் ஒரு பக்கம் இப்படி சென்னையை கண்டுகொள்ளாமல் இருந்தாலும்,சில இயக்குநர்கள் தயவால் அவ்வப்போது சென்னையும் சில திரைப்படங்களில் தலை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது மற்றொரு புதுமுக இயக்குநரும் அந்த சிலருடன்  இனைகிராராம் .சென்னையை  கதைகளமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் 'அட்டகத்தி'.
                 படத்தின் பாடல்களும், டிரைலரும் இது சார்ப்பான கத்தி என்பதை புரிய வைத்ததாம். வட சென்னையில் இருந்து கல்லூரிக்கு வரும் இளைஞனின் காதல் காவியம்தான் இந்தப் படம். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப.ரஞ்சித் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறாராம்.

              இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரையிடப்பட்ட பாடல்களும் சரி, மேடையில் இசைக்கலைஞர்கள் நேரடியாக பாடிய பாடல்களும் சரி அத்தனையும் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் படி இருக்கிறதாம் . குறிப்பாக கபிலன் எழுதி, கானா பாலா பாடியிருக்கும் "ஆடி போன ஆவணி இவ ஆல மையக்கும் தாவனி..." என்ற  பாடல் சற்று துள்ளலான பாடலாம்.

               இப்படம் தமிழ் சினிமாவின் அடுத்த ஜாக்பாட் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையை இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏற்படுத்தியிருக்கிறதாம்.

          ஹீரோவாக தினேஷ் என்பவர் அறிமுகமாக, இவருக்கு ஜோடியாக நந்திதா, ஐஸ்வயா, ஷாலி ஆகிய மூன்று பெண்கள் நடிகிரார்களாம். படத்தில் இடம்பெறும் அத்தனைப் பேரும் அனியாயத்திற்கு சாதரண முகங்களாக இருக்கிறார்கள். இப்படி கதைக்கான பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலும் இப்படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்றே சொல்ல வேண்டுமாம்.
.............................விரைவில் சந்திப்போம் ........காங்கேயன்

Saturday, January 7, 2012

தற்கொலை செய்ய தூண்டுவது எப்படி






         தற்கொலை செய்ய தூண்டுவது எப்படி என்று யாராவது கேட்டால் பின்வரும் points களை ஒவ்வொன்றாக செய்து பார்க்க  என்று சொல்லுங்கள் 

1 .முதலில் எனது பதிவை படிக்க நினைத்தது  
2.  பின் எனது பதிவை படிப்பது ,
3. இந்த பதிவுக்கு கருத்து அனுப்ப நினைப்பது ,
4 . இந்த பதிவை பார்த்து இவன் என்ன லூசா  என்று நினைப்பது , 
5 . என்னை திட்டாமல் இருபது, 
6 . மேலிருக்கும் points களிலிருந்து தற்கொலை செய்ய தூண்டுவது எப்படி என்று நாம் பார்த்தோம் 
            நாளைக்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம் என்று பாப்போம் 
            .......................விரைவில் சந்திப்போம் ..........காங்கேயன்  

Thursday, January 5, 2012

ஜீவாவின் நிறைவேறாத ஆசை

             முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்தாலும் திருஷாவுடன் ஜோடி போடுவது ஜீவாவுக்கு நிறைவேறாத ஆசையாக இருந்ததாம். இவருடைய முந்தையப் படங்கள் சிவவற்றில் நடிக்க திரிஷாவை அனுகியபோது அவரிடம் இருந்து சரியான பதில் வராததால் ஏமாற்றம் அடைந்த ஜீவாவுக்கு இப்போது வெற்றி கிடைத்திருக்கிறதாம்.

கோ படத்தின் மூலம் வசூல் நாயகனாகவும் ஆன ஜீவாவுடன் திரிஷா நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். இவர்கள் இணையும் படத்தை அகமது இயக்கப் போகிறாராம். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த வாமணன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும், தற்போது இவர் சொன்ன கதையை கேட்ட ஜீவா அசந்துப்போய்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

தற்போது கெளதம் மேனன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜீவா, அடுத்ததாக இந்த படத்தில் இறங்கப்போகிறாராம்.

................................விரைவில் சந்திப்போம் காங்கேயன்

Wednesday, January 4, 2012

knee pain-----மூட்டுவலி

                                        
               குளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.
உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும் வேலையை மூட்டுகள் செய்கின்றன.
மூட்டு நாண்களை அளவுக்கு அதிகமாக உபயோகித்தல் மற்றும் கிழிந்து போவதால் மூட்டு நாண் பிடிப்புகள் ஏற்பட்டு வலியை ஏற்படுத்துகிறது.
முழங்கால் மூட்டு மற்றும் பாதத்திலும் இது போன்ற பிரச்னை ஏற்படலாம். மூட்டுப்பை அலர்ஜி ஏற்படும் போதும் மூட்டுப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
எலும்பு, தசைநாண் மற்றும் தசை ஆகியவை மூட்டுகளுடன் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. மூட்டுகளின் அசைவால் ஏற்படும் அதிர்வுகளில் இருந்து காக்கும் வேலையை மூட்டுப்பைகள் செய்கின்றன.
மூட்டுப் பைகளில் அலர்ஜி ஏற்படுவதால் அசைவு மற்றும் அழுத்தத்தின் போது வலி ஏற்படும். தோள்பட்டை, முழங்கை, இடுப்பு மூட்டுகளில் இந்த அலர்ஜி அதிகளவில் ஏற்படும்.
தசை நார்களில் உண்டாகும் அலர்ஜி காரணமாகவும் மூட்டுகளில் வலி, பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வலியை துவக்கத்தில் கவனிக்காமல் விட்டால் 3 மாதங்களுக்கு பின்னர் உடல் முழுவதும் வலி ஏற்படலாம்.
கால்களில் தசைப்பிடிப்பு, தசைகள் எலும்புகளுடன் இணையும் பகுதிகளில் தொடு வலி, தலைவலி மற்றும் இடுப்பு வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் உடல் அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகளவில் வருகிறது. ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது.
இவர்கள் அதிக பதற்றத்தை விட்டு வேலைகளை நிதானமாக செய்யலாம். ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வதை தவிர்க்கலாம். சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் போன்ற பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம். வயிற்று தசைகளுக்கு அவ்வப்போது பயிற்சி கொடுக்கலாம். வலிக்காக அன்றாட வேலைகளை முற்றிலும் தவிர்ப்பதும் தவறானதே.
மூட்டுப் பிறழ்வு, மூட்டு நழுவுதல் போன்ற காரணங்களால் முழங்கை, முன்கை பகுதியில் கடும் வலி ஏற்படும். திடீரென முழங்கையை நீட்டும் போதும் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
முழங்கைப்பகுதி ஒழுங்கற்றுக் காணப்படுவது மற்றும் அதிக வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே வைத்தியரை அணுக வேண்டும். குளிர் காலத்தில் மணிக்கட்டு, கை விரல்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மணிக்கட்டு, விரல்களுக்கு அதிகம் வேலை கொடுப்பது, காயம் காரணமாக வலி ஏற்படலாம். மூட்டு வலிக்கான அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரின் ஆலோசனைப்படி மருத்துவம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சாதாரண மூட்டு பிரச்னைகூட பனிக்காலத்தில் அதிகரிக்கும். வலிகளையும் ஏற்படுத்தும். அதற்கான பாதுகாப்பு முறை மூலம் பனிக்கால மூட்டு வலியை தவிர்க்க முடியும்.
பாதுகாப்பு முறை: மூட்டு வலியைக் குறைக்க மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். மூட்டுகளை அழுத்தி அசைவைக் குறைக்கும் எலாஸ்டிக் கட்டு போடலாம்.
மூட்டுகளில் வலி இருக்கும்போது உடற்பயிற்சியை தவிர்க்கவும். ஒரே வேலையை தொடர்ந்து செய்வதை விட்டு இடையில் சிறிது ஓய்வெடுத்து பின்னர் வேலை செய்யலாம். அதிக எடை தூக்குவதை தவிர்க்கவும்.
குளிர் காலங்களில் அதிகாலை குளிரில் வெளியில் வருவதை தவிர்க்கவும். வெளியில் வர நேர்ந்தால் மப்ளர், சாக்ஸ், ஷூ பயன்படுத்தி கால்கள், கழுத்து பகுதி கதகதப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
குளிரால் மூட்டு வலி ஏற்பட்டால் அப்பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். அதிக எடையை குறைப்பதும் மூட்டுவலியை நிரந்தரமாக வழியனுப்ப ஒரு வழியாகும்.
கால்சியம் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் எலும்பு வலிமை அடையும். குளிர் காலத்தில் மூட்டுக்கான பயிற்சிகளை செய்வதன் மூலம் வலி ஏற்படுவதை தடுக்கலாம்.

............விரைவில் சந்திப்போம் காங்கேயன்

personal loan----மகான் கணக்கு----housing loan

 

Tuesday, January 3, 2012

இந்திய அணியின் கேப்டன்

                இந்திய அணியின் கேப்டன் மஹேந்திரசிங் தோனி சர்வதேச விளையாட்டு பத்திரிகை சங்கத்தின்'நேர்மையான வீரர்' விருதை தட்டிச் சென்றிருக்கிறார். கடந்த ஆண்டு டிரன்ட்பிரிட்ஜில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் இயான் பெல் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டானாராம். மூன்றாவது நாள் ஆட்டத்தில், தேநீர் இடைவேளைக்கு முன், தான் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்றதாக நினைத்து, "பெவிலியன்' நோக்கி நடந்தாராம். உண்மையில் பந்து, எல்லைக் கோட்டை கடக்கவில்லையாம். இதையடுத்து இவரை தோனி 'ரன் அவுட்' செய்தார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி சரி என்பதால், அம்பயரும் 'அவுட்' கொடுத்தாராம். ஆனால், விளையாட்டு உணர்வுடன் நடந்து கொண்ட தோனி, 'அப்பீலை' திரும்ப பெற்று, பெல்லை மீண்டும் 'பேட்' செய்ய அனுமதித்தாராம். அதனால் தோனியின் இந்த செயலை பாராட்டி ஏ.ஐ.பி.எஸ்., நேர்மையான வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனை பெறும் உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இது குறித்து ஏ.ஐ.பி.எஸ்., பொதுச் செயலர் ரோசலின் மோரிஸ் கூறுகையில், 'நேர்மையான வீரர் விருதை முதல் முறையாக கிரிக்கெட் வீரருக்கு வழங்குகிறோம். இது இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும் என்றும் விருது வழங்கும் விழா வரும் ஜன.13ம் தேதி ஆஸ்திரியாவில் நடக்க உள்ளது என அவர் தெரிவித்தார் மேலும்

தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால், இதில் தோனி கலந்து கொள்ள முடியாது. எனவே, இவருக்கு நினைவுப் பரிசை மட்டும் வழங்கியுள்ளோம். விருதுக்கான கோப்பை வரும் ஏப். 4ம் தேதி ஐ.பி.எல்., தொடரின் துவக்க விழாவில் வழங்கப்படும்' என்றார்.

.......................நல்ல ஆட்டகாரனுங்க டோனி
.....................................விரைவில்  சந்திப்போம்   ......காங்கேயன்