Tuesday, December 27, 2011

விருத்தாசலம், டிச.22  முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தேனி மாவட்டம் தீலையம்பட்டி பழைய பேருந்து நிலையப் பகுதியை சேர்ந்த சேகர் (வயது 30) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேமுதிக தலைமை கழக பேச்சாளரான இவர் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் ஒரு கடிதத்தில் மரியாதைக்குரிய கேப்டனுக்கு சேகர் வணக்கத்துடன் எழுதுவது,

முல்லைப்பெரியாறு அணையை இடித்தே தீருவேன் என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறி வருகிறார். அவ்வாறு அணையை உடைத்தால் 5 மாவட்ட விவசாயிகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த அணையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும். அணைக்காக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

நான் தற்கொலை செய்து கொள்ள விருத்தாசலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால் இந்த தொகுதி மக்கள்தான் தே.மு.தி.க. வுக்கும், உங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது என்பதால்தான். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

                 இறை அடி சேர்ந்த சேகருக்கு எனது கண்ணீர் அஞ்சலி.
    தோழா உனது வேண்டுகோள் நிறைவேற கடவுளை நான் பிராத்திக்கிறேன் .................
                                                      ............................................................காங்கேயன்

0 comments:

Post a Comment